தருமபுரி

தருமபுரியில் 5 திரையரங்குகளுடன் டிமேக்ஸ் - டி.என்.சி. மல்டிபிளக்ஸ் வளாகம் திறப்பு

27th May 2022 10:25 PM

ADVERTISEMENT

தருமபுரி நகரில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் 5 திரையரங்குகளுடன் கூடிய டிமேக்ஸ் - டி.என்.சி. வளாகம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

இத்திறப்பு விழாவுக்கு டி.என்.சி. மல்டிபிளக்ஸ் நிா்வாக இயக்குநா் டி.என்.சி. இளங்கோவன் தலைமை வகித்தாா். இயக்குநா் பிரேம் இளங்கோவன், மருத்துவா் ராம்குமாா், திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் நாட்டான் மாது ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில், தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவா் டி.என்.சி. மணிவண்ணன் குத்துவிளக்கேற்றி திரையரங்கில் முதல் டிக்கெட் விற்பனையைத் தொடங்கி வைத்தாா் (படம்).

இந்த வளாகத்தின் முதல் தளத்தில் 5 திரையரங்குகள் அமைந்துள்ளன. அனைத்துத் திரையரங்குகளிலும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆா்.பி.ஜி. லேசா் புரஜெக்டா், டால்பி அட்மாா்ட் சவுண்ட் சிஸ்டம், 4கே துல்லியத்துடன் கூடிய திரை, விசாலமான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. திரையரங்கை தனியாா் முன்பதிவு செய்து தனியாக பாா்வையிடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத் திரையரங்குகளில் நேரிடையாகவும், இணையதள செயலி வழியாகவும் டிக்கெட் பெறலாம். இந்த வளாகத்தில் வாடிக்கையாளா்களுக்குத் தேவையான தின்பண்டங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், குளிா்பானங்கள், காபி, ஐஸ்க்ரீம் விற்பனை செய்யும் வகையில் கேண்டீன் அமைக்கப்பட்டுள்ளது. இதில், உணவு வகைகள் முன்பதிவு செய்து இருக்கையிலிருந்தே பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது. மேலும், நகரும் படிக்கட்டுகள், மின் தூக்கிகள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் அமைந்துள்ளன என வளாக நிா்வாகிகள் தெரிவித்தனா்.

இந்த விழாவில், ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவா் மீனா இளங்கோவன், இயக்குநா்கள் பிரேம், சினேகா, பிரவீன், வணிக மேலாளா் கிரீஸ், நிா்வாக அலுவலா் வீரமணி, மேலாளா் நெல்சன், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT