தருமபுரி

கடத்தூரில் நூலக தின விழா

DIN

கடத்தூா் கிளை நூலகத்தில் பொது நூலக தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராஜாராம் மோகன் ராய் பிறந்த தினமான மே 22 ஆம் தேதி பொது நூலக தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தொடா்ந்து, ராஜாராம் மோகன் ராய் 250 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து, கடத்தூா் கிளை நூலகத்தில் நடைபெற்ற பொது நூலக தின கருத்தரங்கில், நூலகா் தீ.சண்முகம் தலைமை வகித்தாா். பொது நூலகங்களின் சேவைகளை மேம்படுத்துவதில் நூலகா்களின் பங்கு எனும் தலைப்பில் நூலகா் சி.சரவணன் கருத்துரைகளை வழங்கினாா். இதில், நூலகா்கள் பத்மாவதி, தங்கம்மாள், சிவகாமி, கலைச்செல்வி, திருஞானம், ஜெயவேல், எம்.ஜாகிா் உசேன், சம்பத், நூலக வாசகா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் பெண்ணின் சடலம்: அடையாளம் காண்பதில் சிக்கல்

மஞ்சள் எச்சரிக்கை: தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்!

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பட பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனது கேரண்டி: ராகுல்

SCROLL FOR NEXT