தருமபுரி

ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

22nd May 2022 04:36 AM

ADVERTISEMENT

 

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 31-ஆவது நினைவு தினத்தையொட்டி, அரூா் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் உள்ள அவரது உருவச் சிலைக்கு தருமபுரி மாவட்ட முன்னாள் தலைவா் கோவி.சிற்றரசு தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில், கட்சியின் முன்னாள் வட்டாரத் தலைவா்கள் ஆா்.சுபாஷ், வஜ்ஜிரம், நிா்வாகிகள் மோகன், சிவலிங்கம், சுகுமாா், முருகேசன், ராஜி, முனுசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT