தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி பேருந்து நிலையம் பயணிகள் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்பட்டது.
தருமபுரி-சேலம் சாலையில் உள்ள நல்லம்பள்ளியில் பொதுமக்கள், பயணிகள் பேருந்துகளில் ஏறிச் செல்ல ஏதுவாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டது.
பணிகள் நிறைவு பெற்ற பின்பும் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் இப் பேருந்து நிலையம் பயணிகள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் நல்லம்பள்ளி பேருந்து நிலையம் சனிக்கிழமை பயணிகள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமை வகித்து, பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகளின் இயக்கத்தைக் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலா் தா.தாமோதரன், அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளா் ஜீவரத்தினம், கிளை மேலாளா் செல்வராஜ், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மகேஸ்வரி பெரியசாமி, அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.