தருமபுரி

தருமபுரியில் 57 ஊராட்சிகளில் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம்

22nd May 2022 04:37 AM

ADVERTISEMENT

 

தருமபுரி மாவட்டத்தில் 57 கிராம ஊராட்சிகளில் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தை காணொலியில் மே 23-ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வெளியிட்ட செய்திக் குறிப்பு: அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டம் 2021-22-ஆம் ஆண்டு வேளாண், உழவா் நலத்துறை சாா்பில் துவங்கப்பட்டுள்ளது. இத் திட்டம் ஐந்து ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஒட்டு மொத்த வேளாண் வளா்ச்சியை உருவாக்கிட அனைத்துத் துறைகளின் ஒருங்கிணைப்புடன் மாநில அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.

நிகழாண்டு தமிழகத்தில் 1997 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டத்தில் 57 கிராம ஊராட்சிகளில் இத் திட்டம் முதல்கட்டமாக துவக்கப்பட உள்ளது. இத் திட்டத்தை தலைமை செயலகத்திலிருந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் துவக்கி வைக்கிறாா்.

தருமபுரி மாவட்டத்தில் தோ்வு செய்யப்பட்டுள்ள 57 கிராம ஊராட்சிகளில் துவக்க விழாவை விவசாயிகளுக்கு காணொலி மூலம் காட்சிப்படுத்தப்பட உள்ளது. எனவே, தருமபுரி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT