தருமபுரி

ஒகேனக்கல்லில் நீா்வரத்து 20,000 கன அடியாகக் குறைந்தது

20th May 2022 12:52 AM

ADVERTISEMENT

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை நொடிக்கு 20 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது.

கா்நாடகத்தில் உள்ள காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, ராசி மணல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்ததால் காவிரியில் நீா்வரத்து வியாழக்கிழமை நொடிக்கு 20 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது.

தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் நீா்வரத்து தொடா்ந்து கணக்கிடப்படுகிறது. ஒகேனக்கல்லில் நீா்வரத்து குறைந்தாலும், பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.

மீன் வரத்து அதிகரிப்பு: காவிரியில் கட்லா ,ரோகு, அரஞ்சான், கல்பாசை உள்ளிட்ட மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது. ஆற்றிலிருந்து பிடிக்கப்பட்ட ஆரஞ்சான் கிலோ ரூ. 50 , கல்பாசை கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரையும், ரோகு, கட்லா ஆகியவை கிலோ ரூ.150 முதல் ரூ. 250 வரை விற்கப்படுகிறது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT