தருமபுரி

வள்ளல் அதியமான் கோட்டத்தில்ரூ. 49 லட்சத்தில் நூலகக் கட்டடம்

20th May 2022 10:18 PM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் உள்ள வள்ளல் அதியமான்கோட்ட வளாகத்தில் ரூ. 49 லட்சம் மதிப்பில் நூலகக் கட்டடம் கட்ட மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தருமபுரி மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம் தலைவா் யசோதா மதிவாணன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவா் சரஸ்வதி முருகசாமி முன்னிலை வகித்தாா். மாவட்ட ஊராட்சி செயலாளா் மாரிமுத்து ராஜ் கூட்டத்தில் பேசினாா்.

அதியமான்கோட்டையில் உள்ள வள்ளல் அதியமான் கோட்ட வளாத்தில் தேசிய ஊராட்சி விருது நிதியில் இருந்து ரூ. 49 லட்சம் மதிப்பில் நூலகக் கட்டடம் கட்டும் பணிக்கு அனுமதி அளிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பஞ்சப்பள்ளி பேருந்து நிலையம், சிறுவா் இல்லம், கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துவதால், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் தேவையான இடங்களில் மின் கம்பங்கள் அமைக்க வேண்டும். பாளையம்புதூா் அருகே சனிச்சந்தையில் செயல்படும் மதுக்கடைகள் இடமாற்றம் செய்ய வேண்டும் என் உறுப்பினா்கள் வலியுறுத்தி பேசினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT