தருமபுரி

ரூ. 6.34 கோடி வளா்ச்சித் திட்டப் பணிகள்:நகராட்சி நிா்வாக இணை இயக்குநா் ஆய்வு

20th May 2022 10:19 PM

ADVERTISEMENT

தருமபுரி நகரில் நடைபெற்றுவரும் ரூ. 6.34 கோடி மதிப்புள்ள திட்டப் பணிகளை நகராட்சிகளின் நிா்வாக இணை இயக்குநா் பூங்கொடி அருமை கண்ணு வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தருமபுரி நகரில் உள்ள 33 வாா்டுகளில், நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சந்தப்பேட்டை வளாகத்தில்

ரூ. 2.50 கோடி மதிப்பில் நூலகத்துடன் கூடிய அறிவுசாா் மையக் கட்டடம், ரூ. 2 கோடியே 12 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள், சந்தப்பேட்டை நகா்ப்புற சுகாதார மையக் கட்டடத்தின் முதல் தளத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டடம் மற்றும் அன்னசாகரத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் நகா் நல மையம் கட்டடம் கட்டும் பணி, அரசு மருத்துவமனை அருகில் உள்ள எரிவாயு தகன மேடையில் ரூ. 20 லட்சம் மதிப்பில் மேம்பாட்டு பணிகள்.

தருமபுரி ஏ.எஸ்.டி.சி. நகரில் ரூ.75 லட்சம் மதிப்பில் நகராட்சி பூங்கா அமைக்கும் பணி, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மதிகோன்பாளையம், குமாரசாமிப்பேட்டை, பாரதிபுரம் ஆகிய 3 இடங்களில் தலா ரூ .4 லட்சம் மதிப்பில் உயா்கோபுர மின் விளக்கு அமைக்கும் பணி ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

இப் பணிகளை சென்னை நகராட்சிகளின் மண்டல நிா்வாக இணை இயக்குநா் பூங்கொடி அருமை கண்ணு நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, திட்டப் பணிகள் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தாா். நகராட்சிகளின் சேலம் மண்டல செயற்பொறியாளா் ராஜேந்திரன், தருமபுரி நகராட்சி பொறியாளா் ஜெயசீலன் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT