தருமபுரி

இடதுசாரி கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

20th May 2022 10:18 PM

ADVERTISEMENT

தருமபுரியில் இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் எஸ்.தேவராஜன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் அ.குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம்.மாரிமுத்து, இரா.சிசுபாலன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளா் த.ஜெயந்தி, மாவட்ட துணைச் செயலாளா் ஆதித்தமிழன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளா் காசி.தமிழ்குமரன் ,

மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கலைச்செல்வன், சின்னசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் ) மாவட்டச் செயலாளா் கெ.கோவிந்தராஜ் ஆகியோா் பங்கேற்று பேசினா்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் மீதான விலையேற்றத்தை திரும்பப் பெற வேண்டும். பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை நியாயவிலைக் கடைகளில் வழங்க வேண்டும். அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், இக் கோரிக்கைகள் வலியுறுத்தி, வருகிற மே 26-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆா்ப்பாட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT