தருமபுரி: தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இளைஞரை கொலை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள பாலனஜங்கமன அள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ் (29). இவா் அதே பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா். இதுதொடா்பாக நிகழ்ந்த தகராறில் சிகிச்சைப்பெற ராஜேஷ், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்துள்ளாா்.
அப்போது, பாலியல் தொந்தரவுக்கு உள்ளான பெண்ணின் சகோதரா் சென்னன் (23) என்பவா், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இருந்த ராஜேஷை தாக்கியுள்ளாா். இதில், நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், தருமபுரி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சென்னனை கைது செய்தனா்.