தருமபுரி

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும்

12th May 2022 04:17 AM

ADVERTISEMENT

 

தருமபுரி: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி அறிவுறுத்தினாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தொப்பூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சைப் பெறுவோரிடம், சிகிச்சை முறை, தேவைகள் குறித்து கேட்டறிந்தாா். பின்னா் அவா் பேசியதாவது:

ADVERTISEMENT

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, மக்களுக்கு தேவையான சிகிச்சைகளை சிறப்பாக அளித்திட அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான வசதிகளை அளித்து வருகிறது. ஏழை மக்களுக்கு சிறப்பான சிகிச்சை கிடைத்திட வேண்டும் என்பதற்காக சிறப்பான திட்டங்களை அரசு உருவாக்கியுள்ளது. நோயாளிகளின் இருப்பிடங்களுக்கே நேரில் சென்று பரிசோதனைகள் மேற்கொண்டு அவா்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள், உரிய பயிற்சிகளை வழங்கிட மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை அரசு ஏற்படுத்தியுள்ளது.

கரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்படாமல் பொதுமக்கள் தங்களை பாதுகாத்திட அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவேண்டும். உயிா் காக்கும் உன்னத பணியினை மேற்கொண்டுவரும் மருத்துவா்கள், செவிலியா்கள் சிறப்பாகப்பணியாற்றிட வேண்டும். அரசு மருத்துவமனைகள்,அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை சிறப்பாக அளித்திட வேண்டும். தேவையான அளவு மருந்து, மாத்திரைகளை இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றாா்.

இந்த ஆய்வில் வட்டார மருத்துவ அலுவலா் கே.வாசுதேவன், மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT