தருமபுரி

அசைவ உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு துறையினா் ஆய்வு

8th May 2022 12:00 AM

ADVERTISEMENT

தருமபுரி நகரில் உள்ள அசைவ, துரித உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு துறையினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இதில், தரமற்ற 40 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

தருமபுரி மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் நியமன அலுவலா் ஏ.பானு சுஜாதா, வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் நந்தகோபால், குமணன் உள்ளிட்டோா் தருமபுரி நகரம், வெண்ணாம்பட்டி, ஒட்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அசைவ, துரித உணவகங்களில் பயன்படுத்தப்படும் இறைச்சிகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனா். இதில், மூன்று உணவகங்களில் பழைய, தரமற்ற சுமாா் 40 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

இம்மூன்று கடைகளுக்கும் அபராதம் விதித்து, உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT