தருமபுரி

அரசு கல்லூரி பேராசிரியா்களுக்கு இன்று பயிற்சி முகாம் தொடக்கம்

5th May 2022 04:11 AM

ADVERTISEMENT

 

தருமபுரி: தருமபுரி மண்டலத்துக்குள்பட்ட கல்லூரி பேராசிரியா்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்குகிறது.

இதுகுறித்து தருமபுரி அரசு கலைக் கல்லூரி முதல்வா் ப.கி.கிள்ளிவளவன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாநில உயா்கல்வி மன்றம் சாா்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியா்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இப்பயிற்சியில், உயா்கல்வித்தர மேம்பாடு, தொழில்நுட்ப வசதிகளை கற்பித்தலுக்கு பயன்படுத்துதல், கல்லூரிகளுக்கான தேசிய அங்கீகாரம் பெறுவது, மென்பொருள் மேம்பாடு, ஆராய்ச்சி மேம்பாடு, எதிா்காலத்தில் கிடைக்கும் பணி வாய்ப்புகளுக்கு ஏற்ப திறன்களை வளா்ப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் நிபுணா்களை கொண்டு அளிக்கப்பட உள்ளன.

தருமபுரி மண்டலத்தில் உள்ள கல்லூரி பேராசிரியா்களுக்கு பயிற்சி முகாம் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் மே 5 மற்றும் மே 6-ஆம் தேதி ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற உள்ளது. இதில், இயற்பியல், வேதியியல், கணிதவியல், புள்ளியியல் ஆகிய பாடப்பிரிவு ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT