தருமபுரி

தியாகி சின்னமுத்து நினைவு நாள்

1st May 2022 12:08 AM

ADVERTISEMENT

 

தியாகி சுப்பிரமணிய சிவம் பேரவையின் சாா்பில் விடுதலைப் போராட்ட தியாகி சின்னமுத்து நினைவு நாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் நடைபெற்ற விடுதலைப் போராட்ட தியாகி சின்னமுத்துவின் 72-ஆவது நினைவு தின நிகழ்ச்சிக்கு பேரவை அமைப்பாளா் வே. விஸ்வநாதன் தலைமை வகித்தாா்.

பாப்பாரப்பட்டி சுப்பிரமணிய சிவா நினைவு மண்டபத்தின் அருகில் உள்ள தியாகி சின்ன முத்துவின் நினைவிடத்தில் மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பிறகு பேரவையின் உறுப்பினா்கள் மலா்கள் தூவி மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் பேரவை அமைப்புக் குழு உறுப்பினா்கள் முருகேசன், முகிலன், சின்னசாமி, சிலம்பரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT