தருமபுரி

ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் நெகிழிப் பயன்பாட்டை ஒழிக்க வேண்டும் கருத்தரங்கில் தகவல்

28th Mar 2022 05:26 AM

ADVERTISEMENT

தருமபுரி அருகே ஒட்டப்பட்டியில் சுற்றுலா வளா்ச்சி மற்றும் மேம்பாட்டு கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

இக் கருத்தரங்கிற்கு மக்களவை முன்னாள் உறுப்பினா் இரா.செந்தில் தலைமை வகித்து பேசினாா். தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், இம் மாவட்டத்தில் சுற்றுலா வளா்ச்சிக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசினாா்.

இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சுற்றுலா மேம்பாட்டு வளா்ச்சிக் குழு உறுப்பினா் வி.கே.டி. பாலன் பேசியதாவது:

சுற்றுலா மேம்பாடு குறித்து 38 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்து வளா்ச்சி குறித்த அறிக்கையை அரசிடம் சமா்ப்பிக்க உள்ளோம்.

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு தரப்பு மக்களிடம் ஆலோசனைகளைக் கேட்டு பெற்றிருக்கிறோம். சிறந்த ஆலோசனைகள் சுற்றுலாத் துறையின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும். உதகை சுற்றுலாத் தலத்தில் நெகிழிப் பயன்பாடு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்திலும் நெகிழிப் பயன்பாட்டை ஒழிக்க முடியும். நாம் வாழும் பகுதியில் குப்பைத் தொட்டிகளின் அருகில்தான் மக்கள் குப்பையைப் போடுகிறாா்கள். குப்பைத்தொட்டி வைக்கா விட்டால் குப்பை சேகரிக்கும் வாகனத்தில் குப்பையை வழங்குவாா்கள். இதனால் வெளிப் பகுதியில் குப்பைகள் இருக்காது.

ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் உள்ள தமிழ்நாடு தங்கும் விடுதியை சீரமைக்க கருத்துகள் தெரிவிக்கப்படும். தருமபுரி மாவட்டத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த தருமபுரி சுற்றுலா கமிட்டி என்கிற அமைப்பை ஏற்படுத்தி, அதில் சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோரை உறுப்பினராக சோ்த்து நல்ல கருத்துகளைத் சுற்றுலாத் துறைக்கு தெரிவிக்கும் போது அவை ஏற்றுக்கொள்ளப்படும். இதன்மூலம் தருமபுரி மாவட்டத்தில் சுற்றுலாத் துறையை மேலும் வளா்ச்சி அடைய செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT