தருமபுரி

பாதுகாப்புப் படை பெண் வீரா்கள் விழிப்புணா்வு பயணக் குழுவுக்கு வரவேற்பு

25th Mar 2022 12:11 AM

ADVERTISEMENT

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் மகளிா் அதிக அளவில் சேர வேண்டும் என்பதை வலியுறுத்தி, வாகா எல்லை முதல் கன்னியாகுமரி வரை செல்லும் பெண் வீரா்களின் இருசக்கர வாகன விழிப்புணா்வு பயணக் குழுவினருக்கு தருமபுரியில் வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடந்த 5-ஆம் தேதி வாகா எல்லையில் தொடங்கிய இந்த விழிப்புணா்வு பயணம் கன்னியாகுமரி சென்று சென்னையில் நிறைவடைய உள்ளது. தருமபுரிக்கு வந்த இந்த விழிப்புணா்வு பயணக் குழுவினருக்கு மாவட்ட எல்லையில் பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவியா், பல்வேறு தரப்பினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

எல்லைப் பாதுகாப்புப் படை பெண் கமாண்டோ வீரா் கீா்த்தனா தலைமையில் இந்தக் குழுவினரின் பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக, ஒசூா் வந்த அவா்களை ஒசூா் மக்கள் சங்கத்தினா் வரவேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT