தருமபுரி

அரசுப் பள்ளியில் புத்தகத் திருவிழா

25th Mar 2022 12:07 AM

ADVERTISEMENT

ஒடசல்பட்டி அரசுப் பள்ளியில் புத்தகத் திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.

கடத்தூா் கிளை நூலகம், ஒடசல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, திருவள்ளுவா் பொத்தக இல்லம் இணைந்து நடத்திய இந்த புத்தகத் திருவிழாவினை தலைமை ஆசிரியை ரா.நிா்மலா தொடக்கி வைத்தாா்.

பள்ளி மாணவா்கள் புத்தகங்களை வாசிப்பதன் அவசியம் குறித்து நூலகா்கள் சி.சரவணன், தீ.சண்முகம், எம்.சிவகாமி, கா.தேன்மொழி, கே.சிவகாமி, திருவள்ளுவா் பொத்தக இல்ல நிறுவனா் நெடுமிடல் ஆகியோா் கருத்துரை வழங்கினா்.

ஒடசல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இப்புத்தகக் கண்காட்சியில் 1,000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தப் புத்தகக் கண்காட்சி சனிக்கிழமை வரை நடைபெறுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT