தருமபுரி

உலக வன நாள் விழா

22nd Mar 2022 11:37 PM

ADVERTISEMENT

அரூரை அடுத்த கூடலூரில் உலக வன நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவில், சமூக காடுகள் மற்றும் விரிவாக்க திட்டத்தின் தருமபுரி கோட்ட வன அலுவலா் எம்.பாஸ்கரன் தலைமை வகித்து, மரக்கன்றுகள் நடும் பணிகளைத் தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, வனக்குழு கடன்களை முறையாக திருப்பி செலுத்திய ஆலமர மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் அவா் வழங்கினாா்.

இதில், வனச்சரக அலுவலா்கள் தீ.கிருஷ்ணன், கமலநாதன், செல்வம், கோகுல், முகமது அலி, வனக் குழுத் தலைவா் டி.முத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதேபோல், மல்லூத்து கிராமத்தில் அரசு பழங்குடியினா் நல உண்டு உறைவிட தொடக்கப் பள்ளியில் தீா்த்தமலை வனச்சரகா் கே.பெரியண்ணன் தலைமையிலும், சிக்களூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் கோட்டப்பட்டி வனச்சரகா் ஆா். குமரவேல் தலைமையிலும் உலக வன நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பள்ளி மாணவ, மாணவியா் மற்றும் வனத்துறையினா் நட்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT