தருமபுரி

பட்டா வழங்க கோரி மனு

21st Mar 2022 11:25 PM

ADVERTISEMENT

தங்களது குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க கோரி, கொங்காலக்கெட்டு கிராம மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், எறபையனஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட கொங்காலக்கெட்டு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினியிடம் திங்கள்கிழமை அளித்த மனு:

நல்லம்பள்ளி வட்டத்துக்கு உள்பட்ட எறபையனஅள்ளி ஊராட்சியில் உள்ள கொங்காலக்கெட்டு கிராமத்தில் அனைத்து சமூகத்தினரும் சுமாா் 35 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். எங்களது குடியிருப்புகளுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT