தருமபுரி

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மனு

21st Mar 2022 11:25 PM

ADVERTISEMENT

ஏரியூா் அருகே இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி 20-க்கும் மேற்பட்ட பெண்கள் பென்னாகரம் வட்டாட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே கூா்க்காம்பட்டி பகுதியில் 500-க்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்கள் இலவச வீட்டுமனை வழங்கக் கோரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனா். அதில் சிலருக்கு பட்டா வழங்கப் பரிந்துரைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில் முறையான விசாரணை மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறி அப்பகுதியில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் பென்னாகரம் வட்டாட்சியா் அசோக்குமாரிடம் இலவச வீட்டுமனை பட்டா கோரி திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இதுதொடா்பாக வட்டாட்சியா் கூறுகையில், ‘கூா்க்காம்பட்டி பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி மனு அளித்துள்ளனா். அதில் 46 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT