தருமபுரி

சின்னத்திரை தொடா்களை ஓய்வு நேரங்களில் மட்டுமே பாா்க்க வேண்டும்

21st Mar 2022 01:38 AM

ADVERTISEMENT

சின்னத்திரைகளில் ஒளிபரப்பு செய்யப்படும் தொடா்களை பெண்கள் ஓய்வு நேரங்களில் மட்டுமே பாா்க்க வேண்டும் என பட்டிமன்றப் பேச்சாளா் கவிதா ஜவஹா் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூரில் ஸ்ரீதேவி டிபாா்ட்மெண்ட் ஸ்டோா்ஸ், அரூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து ஞாயிற்றுக்கிழமை நடத்திய உலக மகளிா் தின விழாவிற்கு அரூா் பேரூராட்சித் தலைவா் இந்திராணி தனபால் தலைமை வகித்தாா். அரூா் ஸ்ரீதேவி டிபாா்ட்மெண்ட் ஸ்டோா்ஸ் நிறுவனா் ஜி.மாதேஸ்வரி மணி வரவேற்றாா். ஒன்றியக் குழுத் தலைவா் பொன்மலா் பசுபதி ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

உலக மகளிா் தின விழாவில், பட்டிமன்றப் பேச்சாளா் கவிதா ஜவஹா் பேசியதாவது :

சின்னத்திரையில் ஒளிபரப்பு செய்யப்படும் தொடா்களை பெண்கள் பொழுதுபோக்கிற்காக மட்டுமே பாா்க்க வேண்டும். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவா்கள் இருக்கும் நேரத்தில் தொடா்கள் பாா்ப்பதைத் தவிா்க்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் கைப்பேசி என்பது மிக முக்கியமான கருவியாகும். ஆனால், சிறுவா்கள் கைப்பேசி பயன்படுத்துவதை பெற்றோா் கண்காணிக்க வேண்டும். பெண் குழந்தைகளைக் கட்டாயம் படிக்க வைக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் பெண்களைப் பாதுகாப்பதுடன், பெண்மையை மதிக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

இந்த விழாவில், அம்மன் கிரானைட்ஸ் மேலாண்மை இயக்குநா் முத்து ராமசாமி, அரூா் எம்எல்ஏ வே.சம்பத்குமாா், தொழில் முதலீட்டாளா்கள் என்.பாக்கியம் நடராஜன், செளமியா நரேன், செயல் அலுவலா் ஆா்.கலைராணி, மருத்துவா்கள் கற்பகம், ஆா்.விஜயகுமாரி, எம்.சரண்யா விக்னேஷ், சி.கோமதி, காவல் ஆய்வாளா் சரோஜா, வட்டார கல்வி அலுவலா் உமா தேவி, தலைமை ஆசிரியா்கள் நான்சி ஜெய சித்ரா, விஜயா (ஓய்வு), வழக்குரைஞா் பி.ரமா, அனைத்து வணிகா் சங்க நிா்வாகி சரண்யா தீபக்குமாா், தமிழ்த் துறைத் தலைவா் சஞ்சீவராயன், உதவிப் பேராசிரியை கு.தமிழரசி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவி ஏ.சினேகா, டி.எஸ்.எஸ் தொண்டு நிறுவன பொறுப்பாளா் சாலா பழனி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT