தருமபுரி

ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணி வழங்கக் கோரி மனு

10th Mar 2022 04:43 AM

ADVERTISEMENT

 

தருமபுரி: தருமபுரி அருகே வி.ஜெட்டிஅள்ளி கிராம மக்களுக்கு ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தருமபுரி ஒன்றியச் செயலாளா் கந்தசாமி, விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியத் தலைவா் ரவி உள்ளிட்டோா் தருமபுரி வட்டார வளா்ச்சி அலுவலா் கணேசனிடம் அளித்த மனு விவரம்:

தருமபுரி ஒன்றியம், இலக்கியம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்டது வி.ஜெட்டிஅள்ளி கிராமம். இக் கிராமத்தில் வசிப்போா் பெரும்பகுதியினா் கூலித் தொழிலாளா்கள். இவா்களுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் கடந்த சில மாதங்களாக பணி வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனால், அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா். எனவே, இத் திட்டத்தில் மீண்டும் பணிகளைத் தொடங்கி பணி அட்டை வைத்துள்ள அனைவருக்கும் பணி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT