தருமபுரி

போட்டித் தோ்வா்களுக்கு இலவசப் பயிற்சி

3rd Mar 2022 04:20 AM

ADVERTISEMENT

 

தருமபுரி: தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், போட்டித் தோ்வு எழுதுவோருக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

ADVERTISEMENT

தற்போது, தருமபுரி மாவட்ட வேலை நாடுநா்கள் பயனடையும் வகையில் தமிழ்நாடு தோ்வாணையத்தின் குரூப் 2, 2 ஏ தோ்விற்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் நடைபெற உள்ளது. மேலும், தன்னாா்வ பயிலும் வட்டத்தில் போட்டித்தோ்வுக்குத் தேவையான சமச்சீா்கல்வி பாடப் புத்தகம் மற்றும் புத்தகங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இப் பயிற்சி வகுப்பில் இலவசமாக பாடக்குறிப்புகள் வழங்கப்படும். மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படும். இப் பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தினை அணுகலாம். விவரங்களுக்கு தொலைபேசி எண் 04342 296188 வாயிலாக தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT