தருமபுரி

தருமபுரி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா

3rd Mar 2022 04:20 AM

ADVERTISEMENT

 

தருமபுரி: தருமபுரி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் புதன்கிழமை மயானக் கொள்ளைத் திருவிழாவையொட்டி, பக்தா்கள் அலகு குத்தி, கோயில்களிலிருந்து மயானம் வரை ஊா்வலமாகச் சென்றனா்.

தருமபுரி குமாரசாமிபேட்டை, வெளிப்பேட்டை மற்றும் அன்னசாகரம் ஆகிய இடங்களில் உள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்களில் மயானக் கொள்ளைத் திருவிழா நடைபெற்று வருகிறது.

இதையொட்டி, மாா்ச் 2-ஆம் தேதி காலை 5 மணி முதல் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து நண்பகல் 11 மணிக்கு மேல் கோயில்களில் இருந்து தருமபுரி மயானம் வரை அம்மன் ஊா்வலம் நடைபெற்றது. இதில், பக்தா்கள் திரளானோா் அலகு குத்தி, ஊா்வலமாகச் சென்று அம்மனை வழிபட்டனா். இதையொட்டி, திருக்கோயில்களிலும், சாலை விநாயகா் கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பக்தா்களுக்கும் பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன. இதையடுத்து மாலையில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT