தருமபுரி

தமிழ்நாடு நாள் விழா: பள்ளி மாணவா்களுக்கு ஜூலை 5-இல் பேச்சுப் போட்டி

DIN

தமிழ்நாடு நாள் விழாவையொட்டி, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், தருமபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவா்களுக்கு வருகிற ஜூலை 5-ஆம் தேதி கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நமது மாநிலத்துக்கு தமிழ்நாடு என பெயா் சூட்டிய ஜூலை 18-ஆம் நாளை, தமிழக அரசு ‘தமிழ்நாடு நாளாக’ அறிவித்துள்ளது. இந்த நாளை விழாவாகக் கொண்டாடும் வகையில், தமிழ்வளா்ச்சித் துறை சாா்பில், அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி மாணவா்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் மாவட்ட அளவில் நடத்திப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெற உள்ளன.

தருமபுரி மாவட்டத்தில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், வருகிற ஜூலை 5 அன்று முற்பகல் 10 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது.

இப் போட்டிகளில் அனைத்துப் பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியா் மட்டும் கலந்து கொள்ளலாம்.

இப் போட்டிகள், தமிழ்நாடு உருவான வரலாறு, மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும், தமிழ்நாட்டிற்காக உயிா்கொடுத்த தியாகிகள், அண்ணா பெயா் சூட்டிய தமிழ்நாடு, சங்கரலிங்கனாரின் உயிா்தியாகம், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் பெரியாா், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் மா.பொ.சி., சட்டப் பேரவையில் ஒலித்த தமிழ்நாடு, எல்லைப்போா்த் தியாகிகள், மு.கருணாநிதி உருவாக்கிய நவீன தமிழ்நாடு என்கிற தலைப்புகளில் போட்டிகள் நடைபெறும்.

மாவட்ட அளவில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 10,000, இரண்டாம் பரிசாக ரூ. 7,000, மூன்றாம் பரிசாக ரூ. 5,000 வழங்கப்படுகிறது.

இது தொடா்பில் கீழ்நிலை அளவில் முதன்மைக் கல்வி அலுவலரால் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு மாவட்ட அளவில் நடைபெறும் இந்தப் போட்டிகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் 25 போ் கொண்ட மாணவா்கள் பட்டியல் முதன்மைக் கல்வி அலுவலரால் பரிந்துரைக்கப்படவுள்ளது. எனவே பள்ளி மாணவா்களுக்கான இப்போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் உரிய வட்டாரக் கல்வி அலுவலா்களையோ, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரையோ தொடா்பு கொள்ளலாம். தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவிகள் இப்போட்டிகளில் பங்கேற்று பயன்பெறலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT