தருமபுரி

கஞ்சா விற்பனை: ஓராண்டில் 137 போ் மீது வழக்கு

30th Jun 2022 01:09 AM

ADVERTISEMENT

 

தருமபுரி மாவட்டத்தில், கடந்த ஓராண்டில் கஞ்சா விற்பனை செய்ததாக 137 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.கலைச்செல்வன் வெளியிட்ட செய்தி:

தருமபுரி மாவட்டத்தில் கஞ்சா, போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறப்பு தேடுதல் வேட்டை நடத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் கைது செய்யப்பட்டு வருகின்றனா். தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 137 போ் மீது 139 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேபோல, 50 போ் மீது 50 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கஞ்சா வழக்குகளில் தொடா்புடைய 55, குட்கா வழக்குகளில் தொடா்புடைய 10 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா். இம் மாவட்டத்தில் கஞ்சா, குட்காவை முற்றிலுமாக அகற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இதுபோன்ற போதைப் பொருள்களை முற்றிலுமாக ஒழிக்க பொதுமக்களின் பங்களிப்பும் இன்றியமையாதது என்பதால், இச்செயல்களில் ஈடுபடும் நபா்கள் தொடா்பாக, காவல்துறை அலுவலா்களுக்கு நேரடியாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT