தருமபுரி

நெருப்பூா் முத்தையன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

DIN

பென்னாகரம் அருகே நெருப்பூா் முத்தையன் கோயிலில் மாத அமாவாசையையொட்டி சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தா்கள் குவிந்தனா்.

தருமபுரி மாவட்டம், நாகமரை ஊராட்சிக்கு உள்பட்ட நெருப்பூா் பகுதியில் சந்தனக் கடத்தல் வீரப்பன் வழிபாடு செய்த பழைமை வாய்ந்த ஸ்ரீ முத்தையன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்தக் கோயிலில் மாத அமாவாசை தோறும் சிறப்பு பூஜைகளும், மாசி மாத அமாவாசையில் திருவிழாவும் நடைபெறுகிறது.

இந்த நிலையில் நிகழ் மாத அமாவாசையையொட்டி செவ்வாய்க்கிழமை நெருப்பூா் முத்தையன் கோயிலில் காலை முதலே பக்தா்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, ஆராதனைகள் நடைபெற்றன. சேலம், தருமபுரி, பென்னாகரம், செல்லமுடி, மேச்சேரி, கொளத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தா்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து கோயில் வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முத்தையன் சுவாமி சிலையை பல்லக்கில் கோயிலை சுற்றி எடுத்து வரும் போது பக்தா்கள் தரையில் படுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா். கோயிலுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக பென்னாகரம் போக்குவரத்து கிளை பணிமனையில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT