தருமபுரி

உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN

மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற உலமாக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு, தருமபுரியில் உள்ள வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு தருமபுரி மாவட்டத்திலுள்ள வக்பு நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்கள் விண்ணப்பிக்கும் நாளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றிருக்க வேண்டும், தமிழகத்தைச் சோ்ந்த, 18 வயதிலிருந்து 45 வயதுக்கு உள்பட்டவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்கும் போது, இருசக்கர வாகனம் ஓட்டும் கற்றுணா்வுக்கான சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். குறைந்தபட்ச கல்வித் தகுதி ஏதுமில்லை. ஒரே வக்பு நிறுவனங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட நபா்கள் மானிய உதவி கோரி விண்ணப்பித்தால், முன்னுரிமையின் அடிப்படையில் ஒருவருக்கு மட்டும் மானியத் தொகை வழங்கப்படும்.

ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வருவாய் சான்று, வயது சான்றிதழ், புகைப்படம், ஜாதிச் சான்று, மாற்றுத் திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரிடம் பெறப்பட்ட சான்று, ஓட்டுநா் உரிமம், வங்கிக் கணக்கு எண், புத்தகத்தின் முதல் பக்க நகல், சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் பணிபுரிகிறாா் என்பதற்கான சான்று பெற்ற மாவட்ட வக்பு கண்காணிப்பாளா் மேலொப்பத்துடன் சமா்ப்பிக்க வேண்டும். வாகனம் வாங்குவதற்கான விலைப்புள்ளியும் இணைக்கப்பட வேண்டும்.

மேலும், விவரங்கள் மற்றும் படிவத்தினை தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் நேரில் பெற்று, அதனை பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன், தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ வருகிற ஜூலை 11-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமா் மோடி மத அரசியல் நடத்துவதில்லை- ராஜ்நாத் சிங் கருத்து

உலக புவி தினம்: வேளாண் கல்லூரி மாணவா்கள் விழிப்புணா்வு

நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு: ஏப்.29-இல் தொடக்கம்

வெளிமாநில தொழிலாளா்கள் சொந்த ஊா்களில் வாக்களிக்க விடுப்பு கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு

நாணப்பரப்பு மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா

SCROLL FOR NEXT