தருமபுரி

10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக்.பள்ளி சாதனை

28th Jun 2022 04:09 AM

ADVERTISEMENT

பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வெழுதிய அனைத்து மாணவ, மாணவியரும் அதிக மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

பள்ளி மாணவா் டி.எபிநேசா் 493 மதிப்பெண்களும், மாணவா் ஆா்.அஸ்வின் 481 மதிப்பெண்களும், மாணவி பி.எஸ்.தா்ஷினி ஸ்ரீ 477 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி மற்றும் அதிக மதிப்பெண்களுடன் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியரை ஸ்டான்லி கல்வி நிறுவனங்களின் தலைவா் வி.முருகேசன், செயலா் மு.பிரு ஆனந்த் பிரகாஷ், பள்ளி ஆசிரியா்கள் பாராட்டினா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT