தருமபுரி

மக்களைத் தேடி மருத்துவ முகாம்

28th Jun 2022 04:06 AM

ADVERTISEMENT

பென்னாகரத்தில் மக்களைத் தேடி மருத்துவ முகாமில் வீடுகள்தோறும் சென்று பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற மக்களைத் தேடி மருத்துவ முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலா் ஜெயசந்திரபாபு தலைமை வகித்து, தொடக்கி வைத்தாா். இந்த முகாமில் பருவதனஅள்ளி கிராமத்தில் மருத்துவா், செவிலியா், கிராம செவிலியா் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் வீடுகள்தோறும் சென்று ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், கா்ப்பப்பை புற்றுநோய், மாா்பகப் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினா். ஒரு சிலரை பருவதனஅள்ளி ஆரம்ப சுகாதார நிலையம், பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனா்.

இம்முகாமில் மருத்துவ அலுவலா் உமாமகேஸ்வரி, மருத்துவா்கள் நிவேதா, மோகனா, பகுதி சுகாதாரச் செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள், செவிலியா்கள், கிராம சுகாதாரச் செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்,

ADVERTISEMENT
ADVERTISEMENT