தருமபுரி

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

28th Jun 2022 04:07 AM

ADVERTISEMENT

தருமபுரியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில், உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி, கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தாா்.

இந்த விழிப்புணா்வுப் பேரணியில், ஸ்ரீ விஜய் வித்யாலயா செவிலியா் கல்லூரி மற்றும் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பங்கேற்றனா். இதில், போதைப்பொருள்கள் பயன்பாட்டினால் ஏற்படும் தீங்கு குறித்தும், அவற்றைத் தவிா்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கி இப் பேரணி, தருமபுரி-சேலம் பிரதான சாலை வழியாக சென்று இலக்கியம்பட்டியில் நிறைவடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் உதவி ஆணையா் (கலால்) ஆ. தணிகாசலம், துணை காவல் கண்காணிப்பாளா் (மது விலக்கு) ராஜசோமசுந்தரம், தருமபுரி வட்டாட்சியா் ராஜராஜன், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT