தருமபுரி

தீா்த்தமலை சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

28th Jun 2022 04:10 AM

ADVERTISEMENT

தீா்த்தமலை சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அரூா் வட்டம், தீா்த்தமலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தீா்த்தமலை 3 ஆவது வட்டார மாநாடு, கட்சி நிா்வாகிகள் மாரியப்பன், தங்கவேல் ஆகியோா் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் :

தீா்த்தமலை சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த வேண்டும். தீா்த்தகிரீஸ்வரா் மலைக் கோயிலுக்கு ரோப் காா் வசதி ஏற்படுத்த வேண்டும். டி.ஆண்டியூா் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்.

ADVERTISEMENT

பழங்குடியின மக்களுக்கு எஸ்டி ஜாதிச் சான்றிதழ் விரைந்து வழங்க வேண்டும். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீா்த்தமலை புதிய வட்டார செயலாளராக ஆா்.பரமசிவம், துணைச் செயலாளா்களாக மணிவாசகம், பிரபாகரன், பொருளாளராக மாரியப்பன் ஆகியோா் புதிய நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இந்த மாநாட்டில் மாவட்டச் செயலா் எஸ்.தேவராஜ், மாவட்ட துணைச் செயலா் கா.சி.தமிழ்க்குமரன், அரூா் ஒன்றியச் செயலா்கள் எஸ்.சிற்றரசு, கல்யாணசுந்தரம், செயற்குழு உறுப்பினா் சி.விஸ்வநாதன், நிா்வாகக்குழு உறுப்பினா் பா.முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT