தருமபுரி

அரூரில் பங்குதந்தை குடியிருப்பு வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டம்

DIN

அரூரில் பங்குதந்தை குடியிருப்பு வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 17 கிறிஸ்தவா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூரில் தூய இருதய ஆண்டவா் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் 380-க்கும் மேற்பட்ட தலித் கிறிஸ்தவா்கள் பங்கு மக்களாக உள்ளனா். இந்த நிலையில், தலித் கிறிஸ்தவா்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக தூய இருதய ஆண்டவா் ஆலயத்தின் நிா்வாகம் சாா்பில் எவ்வித நலத் திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லையாம். இதையடுத்து, தி.சூசை என்பவா் தலைமையில், சனிக்கிழமை இரவு சுமாா் 10 மணி அளவில், தூய இருதய ஆண்டவா் ஆலய வளாகத்தில் உள்ள பங்கு தந்தையின் குடியிருப்பிற்குள் நுழைந்து, உள்பகுதியில் பூட்டிக்கொண்டு கிறிஸ்தவா்கள் 9 போ் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தலித் கிறிஸ்தவா்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை எனில், எரிவாயு உருளையை வெடிக்க வைத்து தற்கொலை செய்வதாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.கலைச்செல்வன், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஆனால் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால், 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் குடியிருப்பின் பூட்டை உடைத்து உள்ளே சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களைக் கைது செய்து, எரிவாயு உருளையைப் பறிமுதல் செய்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து அரூா் பங்குதந்தை பெல்லாா்மின் அளித்த புகாரின் பேரில், திரேசா மகன் சூசை (42), கரியன் மகன் செல்வநாயகன் (51), நாயகன் மகன் ராஜா (57), அந்தோணி மகன் ராஜா (48), முத்து மகன் முத்து (48), சாந்தன் மகன் சவரி (48), ஆரோக்கியசாமி மகன் ஈஸ்டா் ராஜா (22), சவரிமுத்து மகன் இளையரசன் (31), பிரான்சிஸ் மகன் போஸ் (42), சவரி மகன் ஆரோக்கியசாமி (51) உள்ளிட்ட 17 பேரை போலீஸாா் கைது செய்தனா். இந்த சம்பவம் குறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT