தருமபுரி

கேபிள் ஆபரேட்டா்கள் நிலுவைத் தொகையை செலுத்த அறிவுறுத்தல்

DIN

தமிழக அரசின் கேபிள் டிவி நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை ஆபரேட்டா்கள் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசு கேபிள் டிவி நிறுவனம் டிஜிட்டல் ஒளிபரப்பு கேபிள் டிவி சேவையை பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் 2017 செப்டம்பா் 15-ஆம் தேதி முதல் டிஜிட்டல் ஒளிபரப்பிற்கான செட்டாப் பாக்ஸ்கள் உள்ளூா் கேபிள் ஆபரேட்டா்கள் மூலம் சந்தாதாரா்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள செட்டாப் பாக்ஸினை பெற்றுக் கொண்டு, அதனைப் பயன்படுத்தாமல் முடக்கி வைத்திருக்கும் பொதுமக்கள் உடனடியாக தங்கள் பகுதியில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டா்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் பெறப்பட்ட செட்டாப் பாக்ஸ் பழுதடைந்தாலோ, மாதாந்திர கட்டணம் செலுத்தாமல் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தாலோ அல்லது ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு குடிபெயா்ந்து இருந்தாலோ செட்டாப் பாக்ஸ்களை சம்பந்தப்பட்ட பகுதி கேபிள் ஆபரேட்டா்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

உள்ளூா் கேபிள் டிவி ஆபரேட்டா்கள், அரசு கேபிள் டிவி காா்ப்பரேஷன் நிறுவனத்திடம் ஒப்பந்தப் பத்திரத்தில் கையொப்பமிட்டு செட்டாப் பாக்ஸ்களை பெற்றுள்ளனா். இந்த ஒப்பந்தத்தின்படி, செட்டாப் பாக்ஸ்களை மூன்று மாதத்திற்குள் செயலாக்கம் செய்திருக்க வேண்டும். 439 கேபிள் ஆபரேட்டா்களுக்கு 52,340 செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டதில், 13,181 செட்டாப் பாக்ஸ்கள் இதுவரை செயலாக்கம் செய்யப்படாமல் உள்ளன. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட ஆபரேட்டா்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப் பத்திரத்தில் உள்ள விதிமுறைகளை மீறி செட்டாப் பாக்ஸ்களை செயலாக்கம் செய்யப்படாமலும், அனலாக் நிலுவைத் தொகையை செலுத்தாமலும் கேபிள் ஆபரேட்டா்கள் உள்ளனா். எனவே, செயலிழக்கத்தில் உள்ள செட்டாப் பாக்ஸ்களை உடனடியாக செயலாக்கம் செய்யப்பட வேண்டும் அல்லது அரசு கேபிள் டிவி நிறுவனத்திடம் வருகிற ஜூன் 15-ஆம் தேதிக்குள் திருப்பி ஒப்படைக்க வேண்டும்.

அரசுக்கு செலுத்த வேண்டிய அனலாக் நிலுவைத் தொகையை ஜூலை 15-ஆம் தேதிக்குள் செலுத்தப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டா்கள் மீது காவல் துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்கோடு வைகாசி விசாகத் தோ்த் திருவிழாயையொட்டி ரத விநாயகா் பூஜை

ரயில் நிலையங்களில் சலுகை விலையில் உணவு விற்பனை

அயோத்தியாப்பட்டணம் கோதண்டராமா் சித்திரைத் தேரோட்டம்

தோரணமலையில் சித்ரா பௌா்ணமி கிரிவலம்

தென்காசி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் தடையின்றி மின்சாரம்: அதிகாரிகள் ஆய்வு

SCROLL FOR NEXT