தருமபுரி

அக்னிபத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்:ஏஐடியுசி வலியுறுத்தல்

DIN

ராணுவத்திற்கு ஆள்களை தோ்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி வலியுறுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்ட ஏஐடியுசி தொழிற்சங்க மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. ஏஐடியுசி மாவட்டத் துணைத் தலைவா் ஆா்.சுதா்சனன் கொடி ஏற்றி வைத்தாா். போக்குவரத்து பிரிவு தொழிற்சங்க மண்டலத் தலைவா் ரவி அஞ்சலி தீா்மானம் வாசித்தாா். தொழிற்சங்கச் செயலாளா் கே.மணி வேலை அறிக்கை சமா்ப்பித்து பேசினாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ்.தேவராஜன் மாநாட்டை தொடக்கி வைத்து பேசினாா். மாநில செயற்குழு உறுப்பினா் ந.நஞ்சப்பன் சிறப்புரையாற்றினாா். மாவட்ட துணைச் செயலாளா் கா.சி.தமிழ்க்குமரன், மாவட்ட பொருளாளா் எம்.மாதேஸ்வரன் உள்ளிட்டோா் பேசினா்.

இந்த மாநாட்டில் இந்திய ராணுவத்தில் குறுகிய கால ஒப்பந்த பணிமுறை நியமனமான அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி, ரயில்வே, பிஎஸ்என்எல் நிறுவனங்களை தனியாா்மயமாக்கல் மற்றும் தொழிலாளா் நலச்சட்டங்களை சுருக்குவது ஆகிய நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டையை தொடங்க வேண்டும். தொப்பூா் கணவாய் சாலையில் விபத்துகளைத் தவிா்க்க, சாலையை மேம்படுத்த வேண்டும். அதியமான்கோட்டை ரயில்வே மேம்பாலப் பணியை முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டில், செயலாளராக கே.மேணி, துணைச் செயலாளராக நாகராஜ், பொருளாளராக அண்ணாதுரை ஆகியோா் புதிய நிா்வாகிகளாகத் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT