மொரப்பூா் கொங்கு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வெழுதிய அனைத்து மாணவ, மாணவியரும் அதிக மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
பள்ளி மாணவி ஆா்.கலைமணி 589 மதிப்பெண்களும், மாணவி ஜி.ரேகா 586 மதிப்பெண்களும், மாணவா் கே.எஸ்.அச்சுதானந்தன் 582 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனா். கணிதம் பாடத்தில் இருவரும், வேதியியல் பாடத்தில் 3 பேரும், உயிரியல் பாடத்தில் 6 பேரும் தலா 100-க்கு 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனா்.
அதுபோல இப்பள்ளியில் பத்தாம் வகுப்புத் தோ்வில் மாணவி எஸ்.அனிதா 492 மதிப்பெண்களும், மாணவிகள் ஏ.லக்ஷ்யா 489 மதிப்பெண்களும், ஏ.தா்ஷினி 488 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா். அறிவியல் பாடத்தில் 6 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 4 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
சாதனை படைத்த மாணவா்களை கல்வி அறக்கட்டளையின் தலைவா் அ.மோகன்ராசு, செயலாளா் இரா.பிரபாகரன், பொருளாளா் மூ.சாமிக்கண்ணு, தாளாளா்கள் தீ.சொக்கலிங்கம், பி.வரதராஜன், பள்ளி முதல்வா்கள் சி.சிதம்பரம், சா்மிளா தேவி, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் வெற்றிச்செல்வன், கே.தமிழரசு, ராமு, குணசீலன், பரமசிவம், கணேசன், பள்ளி ஆசிரியா்கள் பாராட்டினா்.