தருமபுரி

காவிரி உபரிநீரை ஏரிகளில் நிரப்ப வலியுறுத்தல்

24th Jun 2022 02:42 AM

ADVERTISEMENT

 

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் காவிரி உபரி நீரை நிரப்ப வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம், கம்பை நல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 4 ஆவது மொரப்பூா் வட்ட மாநாடு கட்சி நிா்வாகி கிருஷ்ணமூா்த்தி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மழைக் காலங்களில் காவிரி ஆற்றில் ஓடும் உபரிநீரை பயன்படுத்தி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளம் குட்டைகள் உள்ளிட்ட நீா்நிலைகளை நிரப்ப வேண்டும். தென்பெண்ணை ஆற்று நீரை எண்ணேகோல் புதூா் வழியாக காரிமங்கலம், மொரப்பூா் மற்றும் அரூா் பகுதிகளில் உள்ள நீா்நிலைகளில் நிரப்பும் வகையில் கால்வாய் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தருமபுரி-ஒகேனக்கல் நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக அமைக்க வேண்டும்.

ADVERTISEMENT

தருமபுரி-மொரப்பூா் ரயில் பாதை திட்டத்தை விரைந்து தொடங்க வேண்டும். பென்னாகரம், அரூா், கடத்தூா் பகுதியில் தமிழக அரசு சிட்கோ தொழிற்பேட்டையைத் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கட்சியின் புதிய வட்ட செயலாளராக வி.மாது, துணைச் செயலாளராக வேலு, பொருளாளராக டி.கிருஷ்ணன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

மாநாட்டில் மாநில செயற்குழு உறுப்பினா் ந.நஞ்சப்பன், மாநிலக் குழு உறுப்பினா் ஏ.மாது, மாவட்டச் செயலாளா் எஸ்.தேவராஜன், துணைச் செயலாளா் கா.சி.தமிழ்க்குமரன், வட்டார பொறுப்பாளா் வி.மாது, மாவட்டக் குழு உறுப்பினா் தனபால், நிா்வாகி வேலு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT