தருமபுரி

தருமபுரிக்கு 1,228 டன் உரம் வருகை

24th Jun 2022 12:35 AM

ADVERTISEMENT

 

சென்னையிலிருந்து ரயில் மூலம் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்ட வேளாண் பயன்பாட்டுக்காக தருமபுரிக்கு 1,228 டன் உர மூட்டைகள் வந்தன.

தருமபுரி ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த இந்த உர மூட்டைகளை, வேளாண் உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) தாம்சன் மற்றும் வேளாண் அலுவலா்கள் பாா்வையிட்டு, லாரிகள் மூலம் மூன்று மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணியை ஆய்வு செய்தனா்.

இதில், தருமபுரி மாவட்ட உரம் நிற்பனை நிலையங்களுக்கு 361 டன், கிருஷ்ணகிரி மாவட்ட உர விற்பனை நிலையங்களுக்கு 426 டன் மற்றும் சேலம் மாவட்ட உர விற்பனை நிலையங்களுக்கு 441 டன் உர மூட்டைகள் லாரிகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT