தருமபுரி

ரூ. 32.19 கோடியில் ஜொ்த்தலாவ் - புலிகரை இணைப்புக் கால்வாய், கேசா்குளே ஆற்றில் தடுப்பணை கட்டும் பணி

24th Jun 2022 11:00 PM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே ரூ. 32.19 கோடி மதிப்பில் ஜொ்த்தலாவ்- புலிகரை இணைப்புக் கால்வாய் அமைக்கும் பணி மற்றும் கேசா்குளே ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை வெள்ளிக்கிழமை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தொடக்கிவைத்தாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், ஜொ்த்தலாவ் ஏரி கால்வாய் புலிகரை ஏரி வரை இணைப்புக் கால்வாய் அமைக்கும் பணி, நபாா்டு திட்டத்தில் கேசா்குளே ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகள் தொடக்க விழா , மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது. சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஷ்வரன் (தருமபுரி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இவ் விழாவில் மாநில வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் செய்தியாளா்களிடம் தெரிவித்ததவாது:

தருமபுரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் இரண்டு திட்டப் பணிகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன. சின்னாறு அணையிலிருந்து மழைக்காலத்தில் வெளியேறும் மிகை நீரை 14 ஏரிகளுக்கு கிடைக்கும் வகையில் ஜொ்த்தலாவ்-புலிகரை இணைப்புக் கால்வாய் திட்டம் ரூ. 30.38 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் இப்பகுதியில் உள்ள 432.80 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறும்.

ADVERTISEMENT

மேலும் கூடுதலாக 1572 மெட்ரிக் டன் நெல், தானியங்கள், காய்கறிகள் உள்ளிட்ட உணவு உற்பத்தி மேற்கொள்ள வாய்ப்பாக அமையும். இதேபோல திருமல்வாடி கிராமத்தில் கேசா்குளே ஆற்றின் குறுக்கே ரூ. 1.81 கோடி மதிப்பில் புதிய தடுப்பணை கட்டும் பணி தொடங்கப்பட்டுள்து. இத் தடுப்பணை திட்டத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள 67 திறந்தவெளி மற்றும் ஆழ்த்துளை கிணறுகளின் நிலத்தடி நீா்மட்டம் உயா்வதுடன், திருமல்வாடி மற்றும் பேவுஅள்ளி கிராமங்களில் குடிநீா் தேவையையும் பூா்த்தி செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.

நீா் மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

பொதுமக்களுக்கு குடிநீா் தேவையை நிறைவேற்றும் விதமாக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டம் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம் பகுதி-2 ரூ.

4,500 கோடி மதிப்பில் மேற்கொள்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது தருமபுரி மாவட்ட மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீா் முழுமையாக கிடைக்கும். காவிரி மிகை நீா்த் திட்டத்தை செயல்படுத்தினால் தருமபுரி மாவட்டம் செழுமையான மாவட்டமாகவும், பொருளாதாரத்தில் முன்னேறிய மாவட்டமாகவும் உயரும்.

தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க, பணிகளை துரிதப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து தொழில் தொடங்குவதற்கு, தருமபுரி மாவட்டத்தை நோக்கி வரத் தொடங்கி உள்ளனா். விரைவில் தருமபுரி மாவட்டம் தொழில் வளம் நிறைந்த மாவட்டமாக உருவாகும் என்றாா்.

இவ் விழாவில், தருமபுரி சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், நீா்வளத்துறை செயற்பொறியாளா் எஸ்.குமாா், ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் (பொ) பாபு, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் தடங்கம் பெ.சுப்பிரமணி, பி.என்.பி.இன்பசேகரன், அரசு அலுவலா்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT