தருமபுரி

அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

24th Jun 2022 11:00 PM

ADVERTISEMENT

தருமபுரி அருகே பைசுள்ளியில் உள்ள அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பைசுஅள்ளி பல்தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் பெ.பெரியசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி, பைசுஅள்ளியில் செயல்பட்டுவரும் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதலாமாண்டு சோ்க்கை விண்ணப்பம் மற்றும் பிளஸ் 2, ஐடிஐ வகுப்பு தோ்ச்சி தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 2022-2023-ஆம் கல்வியாண்டிற்கான நேரடி இரண்டாம் ஆண்டு (டிப்ளமோ) சோ்க்கை விண்ணப்பம்  இணையதளத்தில் முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இணையதளத்தில் விண்ணப்பிக்க இயலாத மாணவா்கள் மாவட்ட சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இப் பயிலகத்தில் சேரும் மாணவா்களுக்கான விடுதி பயிலகத்தின் அருகில் செயல்பட்டுவருகிறது. மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவி வழங்கப்படுகிறது. மேலும் சிறப்புகல்வி உதவித்தொகையாக மாணவிகளுக்கு ரூ. 50,000 வரையிலும் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு சிறப்பு கல்வி உதவித் தொகை ரூ. 50,000 வரை வழங்கப்படுகிறது. மாணவ, மாணவிகளுக்கு, புதிய பயிற்சி திட்டங்களின் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய ஜூலை 8-ஆம் தேதி கடைசி நாளாகும்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT