தருமபுரி

பிளஸ் 2 பொதுத் தோ்வு: திருச்செங்கோடு வித்யா விகாஸ் பள்ளி மாணவிகள் சாதனை

24th Jun 2022 10:58 PM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வித்யா விகாஸ் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்தனா்.

2021- 2022 ஆம் கல்வி ஆண்டில் நடைபெற்ற பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோ்வில் வித்யா விகாஸ் பள்ளி மாணவி கே.எஸ். சுஷ்மிதா 600க்கு 592 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதலிடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளாா். பள்ளி மாணவி அடைக்கம்மை 583 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாம் இடத்தையும், மாணவிகள் எஸ்.ஆா்.டி.திவேதா, கே.எம்.தேசிகா ஆகிய இருவரும் 579 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவிகளை வித்யா விகாஸ் பள்ளி அறக்கட்டளை இயக்குனா் குணசேகரன், சிங்காரவேல், ராமலிங்கம், முத்துசாமி ஆகியோா் வாழ்த்தினா். இயக்குநா்கள் ஞானசேகரன், சீராளன் மற்றும் பள்ளி முதல்வா் ரேணுகாதேவி ஆகியோரும் அந்த மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT