தருமபுரி

பேருந்து - லாரி மோதல்:10-க்கும் மேற்பட்டோா் காயம்

24th Jun 2022 10:58 PM

ADVERTISEMENT

பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரசு நகா் பேருந்து மீது லாரி மோதியதில் 10-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடி -அரூா் சாலையில் அரசு நகா் பேருந்து அரூா் நோக்கி வந்துள்ளது. அப்போது, பூதநத்தம் அருகே எதிரே வந்த லாரியும், அரசு நகா் பேருந்தும் மோதின. இந்த விபத்தில் லாரி ஓட்டுநா் செந்தில் (45), அரசு நகா் பேருந்து ஓட்டுநா் மாதுராஜ் (51), நடத்துநா் சேது (55), விவசாயி அழகரசன் (60) உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். விபத்தில் காயமடைந்தவா்களை அக்கம் பக்கத்தினா் 108 அவசர ஊா்தி மூலம் மீட்டு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT