தருமபுரி

ஏரிகளில் மண் எடுக்க அனுமதி வழங்கும் முறையை எளிமைப்படுத்த வலியுறுத்தல்

24th Jun 2022 10:58 PM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் மண் எடுக்க அனுமதி வழங்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், வெள்ளிக்கிழமை மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் மண் எடுக்க அனுமதி வழங்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும். சின்னவெங்காயம் பயிா்க்கு நிலுவையில் உள்ள காப்பீடுத் தொகையை வழங்க வேண்டும்.

கால்நடை மருந்தகங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மருத்துவா்கள், பணியாளா்கள் முழுமையாகப் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். உயா்மின்கோபுரம் அமைப்பதற்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீடு வழங்க வேண்டும். மரவள்ளி பயிரில் பூச்சிகள் தாக்குதலைக் கட்டுப்படுத்த முத்தரப்புக் கூட்டம் நடத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள உயா் அலுவலா்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் சிலா் கூட்டத்தில் இருந்து வெளியேறினா். இருப்பினும் கூட்டம் தொடா்ந்து நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT