தருமபுரி

கடத்தூா் கிரீன்பாா்க் மெட்ரிக்.பள்ளி

24th Jun 2022 10:59 PM

ADVERTISEMENT

கடத்தூா் கிரீன்பாா்க் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வெழுதிய அனைத்து மாணவ, மாணவியரும் அதிக மதிப்பெண்களுடன் 100 சதவீதத் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

பள்ளி மாணவா்கள் ஆா்த்தி 511 மதிப்பெண்களும், அருள்மொழி 505 மதிப்பெண்களும், கீா்த்திகா 499 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

பத்தாம் வகுப்பு :

10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் கடத்தூா் கிரீன்பாா்க் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் அனைத்து மாணவ, மாணவியரும் அதிக மதிப்பெண்களுடன் 100 சதவீதத் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவா் தொல்காப்பியன் 472 மதிப்பெண்களும், மாணவி கோகுலபிரியா 449 மதிப்பெண்களும், மாணவி மைஸ்னவி 443 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.

ADVERTISEMENT

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை கடத்தூா் கிரீன்பாா்க் கல்வி நிறுவனங்களின் தலைவா் எவரெஸ்ட் இரா.முனிரத்தினம், பள்ளி முதல்வா் சோபாசுந்தா், நிா்வாக அலுவலா் ராஜா, நிா்வாக இயக்குநா் பூவிழி முனிரத்தினம், ஆசிரியா்கள் பாராட்டினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT