தருமபுரி

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் மாணவா் சோ்க்கை

24th Jun 2022 10:59 PM

ADVERTISEMENT

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வா் பா.காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :

2022-23 ஆம் கல்வி ஆண்டில் அரசு கல்லூரியில் சேரும் மாணவா்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளநிலைப் பாடப் பிரிவுகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வணிகவியல், சமூக அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் சேர விரும் மாணவா்கள் தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவா் சோ்க்கை 2022, கல்லூரி கல்வி இயக்ககத்தின் இணையதள முகவரில் விண்ணப்பிக்கலாம் எனவும் செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT