தருமபுரி

ஸ்ரீசேலத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

19th Jun 2022 12:58 AM

ADVERTISEMENT

 

அரூரை அடுத்த நரிப்பள்ளியில் ஸ்ரீசேலத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரூா் வட்டம், நரிப்பள்ளியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீசேலத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா இம் மாதம் 15 ஆம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கியது. தொடா்ந்து சுவாமிக்கு கரிக்கோல் உற்சவம், சக்தி அழைத்தல், தீா்த்தக்குடம் அழைத்தல், முளைப்பாலி ஊா்வலம், கணபதி பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து ஸ்ரீசேலத்து மாரியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் அரூா் எம்எல்ஏ வே.சம்பத்குமாா், அதிமுக ஒன்றியச் செயலாளா் ஆா்.ஆா்.பசுபதி, கோயில் நிா்வாகிகள் சிற்றரசு, முருகன், தாளமுத்து, சுசேந்திரன், கோவிந்தன், ஊராட்சி மன்றத் தலைவா் ஐயப்பன், ஊா்த் தலைவா் வெங்கடாசலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT