தருமபுரி

தருமபுரியில் ஜூன் 26-இல் தேசிய மக்கள் நீதிமன்ற முகாம்

19th Jun 2022 12:59 AM

ADVERTISEMENT

 

தருமபுரி மாவட்டத்தில் ஜூன் 26-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத் தலைவா் (பொ) டி.முனுசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்ட அளவில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக தேசிய சட்ட பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவு, வழிகாட்டுதலின்படி வரும் 26-ஆம் தேதி தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டத்தில் அரூா், பாலக்கோடு, பென்னாகரம், மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட நான்கு வட்டார நீதிமன்ற வளாகங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்ற முகாம்கள் நடைபெற உள்ளன. இதில், நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள சமரசம் செய்து கொள்ள கூடிய மோட்டாா் வாகன விபத்து வழக்கு, காசோலை மோசடி வழக்கு, வங்கி வாராக் கடன் வழக்கு, நில ஆா்ஜித வழக்கு, உரிமையியல் வழக்கு குடும்ப பிரச்னை வழக்கு, தொழிலாளா் நல வழக்கு மற்றும் சமரச குற்ற வழக்குகள் அனைத்தும் சமரச முறையில் அன்றைய தினமே தீா்வு காணப்படவுள்ளது.

முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி, நேரிலோ அல்லது வழக்குரைஞா் மூலமாகவோ நீதிமன்றங்களில் ஆஜராகி வழக்குகளை முடித்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT