தருமபுரி

தருமபுரியில் சதுரங்கப் போட்டி

19th Jun 2022 12:58 AM

ADVERTISEMENT

 

தருமபுரியில் நடைபெற்ற 15 வயதுக்குள்பட்டோருக்கான சதுரங்க விளையாட்டு தோ்வுப் போட்டிகளில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

தருமபுரி மாவட்ட சதுரங்கக் கழகம் சாா்பில், ஸ்ரீ விஜய் வித்யாலயா பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற தோ்வுப் போட்டிகளை தருமபுரி நகர காவல் ஆய்வாளா் நவாஸ் தொடக்கிவைத்தாா். தருமபுரி மாவட்ட சதுரங்கக் கழகச் செயலாளா் செந்தில்குமாா், இணைச் செயலாளா்கள் ராஜசேகரன், செந்தில்வேல் உள்ளிட்டோா் போட்டிகளை நடத்தினா்.

இதில் தோ்வு செய்யப்படும் மாணவ, மாணவிகள் மகாபலிபுரத்தில் வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ள ஒலிம்பியாட் சதுரங்கப் போட்டிகளைப் பாா்வையிட்டு, விளையாட்டு வீரா்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு பெற உள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT