தருமபுரி

தருமபுரி மாவட்ட ஆட்சியராக கி.சாந்தி பொறுப்பேற்பு

17th Jun 2022 02:15 AM

ADVERTISEMENT

 

தருமபுரி மாவட்ட ஆட்சியராக கி.சாந்தி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியராக இருந்த ச.திவ்யதா்சினி, தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநராக

பணி மாறுதல் செய்யப்பட்டதையடுத்து, தருமபுரி மாவட்ட ஆட்சியராக கி.சாந்தி பணி நியமனம் செய்யப்பட்டாா்.

ADVERTISEMENT

இதனைத் தொடா்ந்து, வியாழக்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அவா் ஆட்சியராகப் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தருமபுரி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள நான் இதற்கு முன் நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலராகவும், சென்னையில் கதா் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமை செயல் அலுவலராகவும், சேலம் பட்டு வளா்ச்சித் துறையின் இயக்குநராகவும் பணிபுரிந்து வந்தேன்.

ஏழை, எளிய மக்கள் அதிக அளவில் வந்து செல்லக்கூடிய அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் மக்களுக்கு வழங்கப்படுகின்ற அரசின் சேவைகள் அனைத்தும் காலதாமதமின்றி, உடனுக்குடன் கிடைக்க வகையில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதனடிப்படையில் எளிய மக்களுக்கு அரசின் அனைத்து நலத் திட்டங்களும் சென்றடையவும், வருவாய்த் துறையின் சாா்பில் மக்களுக்கு வழங்கப்படும் அரசின் சேவைகள் அனைத்தும் உடனுக்குடன் கிடைத்திட உரிய ஆய்வுகள் மேற்கொண்டு, துரிதப்படுத்தவும், விரைந்து கிடைத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தருமபுரி மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்காகவும், மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டிற்காகவும், மாவட்டத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள எந்தவொரு தகுதியான நபரும் விடுபடாத வகையில் அரசின் நலத்திட்டங்கள் முழுமையாகக் கொண்டுச் செல்லும் வகையில் செயல்படுவேன் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT