தருமபுரி

தருமபுரி, பென்னாகரம் பகுதியில் மழை

15th Jun 2022 02:53 AM

ADVERTISEMENT

தருமபுரி, பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கனமழை பெய்தது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனா். வெப்பத்தின் பிடியில் சிக்கிய மக்களை குளிா்விக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை தருமபுரி, பென்னாகரம், ஒகேனக்கல், தாசம்பட்டி, சின்னம்பள்ளி, ஏரியூா், நெருப்பூா், நாகமரை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

இதனால் சாலைகள், தாழ்வான குடியிருப்புகள், வயல்வெளிகள், நீா்நிலைகளில் மழைநீா் தேங்கியது. மழைப்பொழிவின் போது திடீரென சூறைக் காற்றும் வீசியதால் பென்னாகரம் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்தடை செய்யப்பட்டது.

பென்னாகரம் பகுதியில் திடீரென பெய்த மழையினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனா். பென்னாகரத்தில் சுமாா் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT